Friday 22 June 2012

மாட்டிக்கிட்டியேடா மங்குனி.....


ணக்கம் வணக்கம் வணக்கம்.......
  நேத்து நைட்டு நடந்த ஒரு மேட்டர உங்ககிட்ட பகிர்ந்துக்க இந்த போஸ்ட்!
அது என்னாச்சின்னா.......

 நேத்து சகுனி படம் ரிலீஸ் இல்லையா... அதான் படம் பார்க்க போகலாம்னு கெளம்பி அனகாப்புத்தூர்ல இருக்குற அருண்மதி தியேட்டர் போனோம்.... பிரண்ட்ஸ் ஒரு நாலு பேரு..... நைட்டு 9.30 ஷோ!
 ஆனால் பாருங்க நாம போனதே பத்துமணிக்கு தான்,...... தியேட்டருக்கு போனால் அங்க ஹவுஸ்ஃபுல்..... நின்னுக்கிட்டு தான் படம் பாக்கணுமாம்,....
 போங்கடாங்....னு சொல்லிட்டு தியேட்டருக்கு பக்கத்துல இருக்குற பிரண்டு வீட்டுக்கு போயி, தூங்கிட்டிருக்குற அவன எழுப்பி மொக்க போட்டுக்கிட்டே இருந்தா, டைம் பதினொண்ணு ஆகிடுச்சி....

 சரி வீட்டுக்கு போகலாம்ணு கெளம்பியாச்சு..... பிரண்ட்ஸ்ல ரெண்டு பேரு முன்னாடி பைக்ல போயிட்டாங்க.... நான் மன்சூர் பைக்ல ஏறிக்கிட்டேன்.... பயபுள்ள சரக்குல இருந்திருக்கு..... பாத்து ஓட்டுடா மாப்ள அப்பிடின்னு சொல்லிக்கிட்டு..... கொஞ்ச தூரம் தான் வந்திருப்போம் போலீஸ் ல மாட்டிக்கிட்டோம்..... ஹெல்மெட் இல்ல... லைஸன்ஸ் இல்ல.... ஆ.ர்.ஸ் புக்கு இல்ல.... இன்சூரன்ஸ் இல்ல.... ரோடு டாக்ஸ் வீடு டாக்ஸ் ஒரு எழவும் இல்ல....
 இது போதாதுண்ணு டிடி வேற... (ட்ரிங் அண்டு ட்ரைவ்)

 சரிதான்... படம் பார்க்க கொண்டாந்த மொத்த பணத்தையும் இவனுககிட்ட அழுவனுமாண்ணு தலைய சொறிஞ்சிக்கிட்டே வண்ண்டிய விட்டு எறங்கினேன்..... ஏட்டு ஒருத்தன் மன்சூர் பக்கத்துல வந்து “ஊது...” அப்பிடின்னான்...

இவனும் வேற வழியில்லாமல் ஏட்டு மூஞ்சீலயே ஊஃப்ஃப்.............. அப்பிடிண்ணு ஊதினான்....

“ஸார் ட்ரிங் அன் ட்ரைவ் ஸார்” அப்பிடிணு உள்ள இருக்கிறவன்கிட்ட சத்தமா சொன்னான்....

“இழுத்துட்டு வாங்கயா உள்ள...” அப்பிடின்னு உள்ள இருந்து குரல் கேட்டிச்சு....


 ஏட்டு வண்டிய ஆஃப் பண்ணி சாவிய புடுங்கிக்கிட்டு “உள்ள போயி இன்ஸ்பெக்டர பாருங்க”

 உள்ள நுளையுறப்போ மன்சூர் காதுல “மச்சி ஸ்கிரீன் ப்ளே என்னது.... டயலாக்ஸ் உன்னது” அப்பிடின்னான்.

 எதுக்கும் ரெடின்னு தைரியமா நுளைஞ்சாச்சு!

“என்னாங்கடா குடிச்சிட்டு வண்டி ஓட்டுறிங்களா?” இன்ஸ் வெயிட்டா எதிர்பாக்குறார்னு புரிஞ்சிடிச்சி!

 அதுவரைக்கும் கம்ணு இருந்த மன்சூர்... இன்ஸ் பக்கத்துல போயி ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டான்.... எனக்கே திகில் ஆகிடுச்சி....

 “ஸார்..... என்ன கொல்லுங்க சார்.... எனக்கு வாழவே புடிக்கல.. என்ன கொன்னுடுங்க சார்.... ப்ளீஸ்...... என்னை என்கவுண்டர் பண்ணிடுங்க சார்....” அப்பிடிண்ணு சொல்லிக்கிட்டு ஓ.........ண்ணு அழுவுறான்....

எனக்கும் இன்ஸ்கும் ஒண்ணுமே புரியல திரு திருன்னு முழிக்குறோம்....
“ஏ இந்தாப்பா.... சாகப்போறியா ஏன்பா...?” -இது இன்ஸ்.
“ வாணாம் சார்... என்னைய எதுவும் கேக்காதீங்க எனக்கு வாழ பிடிக்கலே... என்ன கொண்னுடுங்க சார்... எங்க சார் உங்க துப்பாக்கி அதுல என்னைய சுட்டு கொல்லுங்க சார்..” அப்பிடின்னு பயபுள்ள கால்ல விழுந்துடிச்சி....

“ஆத்தீ...” எனக்கு மனசுக்குள்ள பக் பக்ன்னு இருக்கு....

அவன் எங்க நிறுத்தினான்.... “சார் என்ன கொண்ணுடுங்க்க சார்.... என்னைய அவ வேணாம்னு சொல்லிட்டா சார்... எனக்கு வாழவே புடிக்கல.....”

 இன்ஸ் “என்னடா லவ் கேஸ்ஸா.??’

ஆங்... எனக்கு கப்புண்ணு புரிஞ்சிடுச்சி.... நான் மன்சூர் பக்கத்துல போயி அவன தூக்கிக்கிட்டே ”சார்... லவ் பெயிலியர் சார்.... அத மறக்க வைக்க தான் குடிக்க வச்சோம் சார்..”அப்பிடின்னேன்....

ஆனா மன்சூர்....” சார் நான் அப்பவே சாகலான்மு தான் சார் இருந்தேன் இவன் தான் சார் சரக்கு வாங்கி குடுத்தான் இவனையும் சுடுங்க சார்...”அப்பிடிண்ணு கண்ணாபின்னான்னு பொலம்புறான்.....

இன்ஸ்கு கண்ணென்லாம் செவந்துபோச்சு..... இந்த கேஸ்ஸ வச்சிருந்தா நமக்குத்தான் தலைவலின்னு நெனச்சி...
 ”யோவ் கூட்டிட்டு போயா வூட்டுக்கு....” னுட்டாரு....
அப்புறமென்ன அழுதுக்கிட்டேன் வண்டி வரைக்கும் வந்து வண்டிய எடுத்துக்கிட்டு எஸ்கேப்!

 மன்சூர் நடிப்பு செம....
பின்ன என்னங்க குடிச்சிட்டு வண்டி ஓட்டினா 5000 ரூவா ஃபைன் இல்லைன்னா 2 வருஷம் கழி திங்கணும்.... எவன் கட்டுவான் ஃபைன்??

இவன வச்சிருந்தா ஸ்டேஷன்ல எதனா பண்ணிக்கப்போறான், நம்ம தல தான் உருளும்னு நெனைச்சி இன்ஸ்சும்  விட்டுட்டாரு.....
இப்போ வரைக்கும் போனை போட்டு சிரிச்சுக்கிட்டே இருக்கிறேம்..... ஹிஹிஹிஹி.......................




 நன்றி.