Sunday 22 April 2012

கும்புடுறேனுங்கோவ்வ்....!!!

மஹா ஜனங்களே..... கும்புடுறேணுங்கோவ்வ்....


இவனும் எப்பவாச்சும் பதிவு போடுவான்..... நாமளும் படிக்கலாம்ணு மூணு மாசமா நம்பி காத்திருந்த உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி.... என்னங்க பண்ணுறது எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன.....???


”என்ன பதிவு போடலாம்”னு ஒரு மாசமா யோசிச்சிக்கிட்டிருந்தேன்.....

”என்ன பதிவு போடுறதுண்ணே தெரியல நீயெல்லாம் எதுக்கு ப்ளாக் ஆரம்பிச்சே”ண்ணு ஒரு மாசம் யோசிச்சேன்.....

”அட இப்பிடி யோசிச்சே ரெண்டு மாசத்த ஓட்டிட்டமே”ண்ணு ஒரு மாசம் உக்காந்து ஃபீல் பண்ணிட்டிருந்தேன்.....

திரும்பி பாத்தா... அடி ஆத்தா.... மூணு மாசம் போயிடுச்சி.....


சரி விடுங்க இப்பவாச்சும் ஒரு முடிவுக்கு வந்தனே...

தாமரைக்குட்டி


 தாமரைக்குட்டிணு எதுக்கு பேரு வச்சேனுணு கேக்காத ஆள் இல்ல....

தாமரை எங்கணா குட்டி போடுமா பக்கி...லாஜிக் உதைக்குதே?ணு கூட ஐடியா மணி கேட்டாப்புல.....

அப்பிடி கேட்டதும் தான் எனக்கு ஐடியாவே வந்திச்சு....

 நாமளும் லாஜிக்கே இல்லாம பீட்டர் உடுறதும் பதிவுக்கு சம்பந்தமே இல்லாம தலைப்பு வைக்கிறதும்... எங்கங்க இருக்கு லாஜிக்?

இத சிம்பாலிக்கா சொல்லுறதுக்காக தான் இப்பிடியொரு பெயரு....

நம்மக்கிட்டையும் லாஜிக் எதிர்பாக்கக்கூடாது, இஷ்டத்துக்கு பீட்டர் உடுவேன் ஆமா.....


நானும் பதிவுலகத்துல புகுந்துட்டேன்... உங்களோட வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் இன்ன பிற உதவிகள் அனைத்தும் தேவை...

என்னுடைய ப்ளாக்கில் திரட்டிகளின் ஓட்டு பட்டிகள் இணைப்பதில்லை என தீர்க்கமாக முடிவெடுத்துள்ளேன்... ஏன்ணா எவனும் ஓட்டு போட மாட்டான்... ஹிஹிஹிஹி....

என்னை முதன் முதலில் முக நூலின் நாற்று குழுமத்தில் சேர்த்து நட்பின் வட்டம் பெருக வைத்த ஐடியா மணி க்கு நன்றி...

இனி வரும் நாட்களில் சீராண இடைவெளியில் கலகல பதிவுகளை நீங்கள் படிக்கலாம்....., சிரிக்கலாம்....

உங்களின் கருத்துக்களை, ஆலோசனைகளை, வாரி வழங்கி வாழ்த்துமாறு கேட்டுக்கிறேன்...

தொழில் நுட்ப அறிவில் நான் எவ்வளவு வீக் என்பதை மதுரனும், நிரூபனும் நன்கு அறிவார்கள்.... (மணிக்கணக்கா சாவடிச்சிருக்கேன்ல.....)

பொறுமை காத்து ஒரு வழியாக என்னை முதல் பதிவு எழுத வைத்த அனைவருக்கும் நன்றிகள் மீண்டும்...

விரைவில் பதிவுகளுடன் சந்திப்போம்.......

ஹாவ் ஃபன்...


அன்புடன்:
தாமரைக்குட்டி.