Monday 3 December 2012

ஆதலால் காதல் செய்யாதீர்! -சிறுகதை

ால் கல் செய்யீர்!! -சிறுகதை.

ண்ணம், எழத். தாமரைக்குட்டி.
  
பகுதி. 01

லமணி நேர பயணத்தின் பின்பு.., ஒரு நாள் இரவு உன் இடம் வந்து அடைந்திருந்தேன்.

மழை தொடர்ந்தும் பெய்துகொண்டிதானிருந்தது.
நனைந்து விட்டிருந்தேன்.

டவலோடு வரவேற்றாய் நீ!
என் நனைந்துவிட்ட பையை வாங்கிக்கொண்டதும், உன்னிடம் உள்ள டவலை நான் வாங்கிக்கொண்டேன்.

தலையை துவட்டிக்கொண்டே நான்..
‘ஏன் வீட்ல யாருமே இல்ல?’
‘அப்பா வெளியில் சென்றிருக்கிறார்...’
‘வேலையாட்கள்..??’
‘வேலை முடிந்து, வீடு சென்றுள்ளார்கள்.. பயணம் எப்படி இருந்தது..’
‘இடைவிடாத மழை... பரவாயில்லை.. களைப்பு..’
‘இரு நான் சென்று உனக்காக சாப்பாடு தயார் செய்கிறேன்..’
‘ஹ்ம்ம்.. நான் உன் வீட்டை சுற்றி பார்த்துக்கொள்கிறேன்..’
‘மேலே முதல் மாடியில் வலது பக்கம் என்னுடைய அறை... அதை தொடர்ந்து அடுத்த அறை உனக்கா தயார்ப்படுத்தி வைத்திருக்கிறேன்..’

மேலே படிக்கட்டுகளில் ஏறினேன்... மரங்களிலானான கைப்பிடிகள்..
‘வலது பக்கமா சொன்னாய்?’
’ஆமாம்..’
திரும்பிய இடமெல்லாம் சிறிய புகைப்படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன...

அவளுடைய அறையை அடையாளம் கண்டு, திறந்தேன்..
அறை நிறைய புகைப்படங்கள்.. ஓவியங்கள், அலங்கார விளக்குகள், சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட அலங்காரங்கள்... நடுவே சிரித்துக்கொண்டு உனது புகைப்படம்...

கட்டில்... பெரிய கட்டில்... இரண்டு தலையணை....
‘எனக்கு பக்கத்து அறையா?’
‘ஆமா...’ (கீழிருந்து குரல் வந்தது.)
தொடர்ந்தேன்..

ஒரு பகுதி சிவற்றில் சுவரை ஒட்டிய பெரிய டி.வி.. மேஜை, அதை தொடந்து பல எலெக்ட்ரானிக் கருவிகள்..

கட்டிலருகே சென்றேன்... கட்டிலில் அவளுடைய போன்.
பிங் நிறத்திலான உறையுடன் பிளாக்பெர்ரி.
கையிலெடுத்ததும் சினுங்கியது....
Dad என்ற எழுத்துக்களுடன் கண்ணாடி போட்ட ஒருவரின் புகைப்படம் திரையில்...
‘அப்பா போன் பண்ணுறார்...’
’எடுத்து பேசு..’ மீண்டும் கீழிருந்து குரல்....
‘ஹல்லோ...’
‘வந்துட்டாராமா.... ‘
‘அங்கிள் நான் தான் பேசுறேன்...’
’ஓ... வந்துட்டிங்களா தம்பி... இதோ கடைத்தெருவரைக்கும் வந்தேன்.. கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்... சாப்பிடுங்க..’
‘சரி அங்கிள்..’
‘மழையில் மாட்டிக்கிட்டிங்களா?’
‘ஆமா அங்கிள்...’
‘அச்சோ.. தலை துவட்டிக்கோங்க... இதோ கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்... வச்சிடுறேன் தம்பி..’
‘சரி அங்கிள்..’

தொலைபேசியை கையில் வைத்துக்கொண்டே அறைக்குள் தொடர்ந்தேன்...

ஒரு பெரிய கண்ணாடி.. அதை சுற்றி சிப்பிகள் பதித்து வைத்திருக்கிறார்கள்... ஜன்னல், ஜன்னல் திரை காற்றில் ஆடிக்கொண்டிருந்தது...
திறந்தேன்...

சில்லென்று காற்று...
கேரளா காற்றை முதன் முதலாக அணுபவிக்கிறேன்..
வெளியில் மழைக்கால இருட்டு.. ஆங்காங்கே மின்னிடும் இரவு நேர மின்சார விளக்குகள்.

அறைக்குள் மீண்டும் பார்வையை செலுத்தினேன்... அறைக்கதவின் பின்புறம் ஒரு வாசகம் தாங்கிய பலகை...
மலையாள எழுத்துக்கள்..
ஆர்வமாக பார்த்துகொண்டிருக்கும்போதே கதவு நகர்ந்தது..

‘காஃபி ரெடி..’
‘ நன்றி.... அறை அருமையாக வைத்திருக்கிறாய்...’
‘ நன்றி...’
‘இது என்ன வாசகம்.. புரியவே இல்லையே...?’ -கதவின் பின்புறம் சுட்டிக்காட்டினேன்..

‘ஓ அதுவா... அது மலையாளம்.. அதன் அர்த்தம் ’நீ எனக்கானவன்’ உனக்காக வாங்கி மாட்டிக்கொண்டேன்..’

கையில் இருந்த காஃபியை மேஜையில் வைத்துவிட்டு அவளை மார்போடு இறுக்கி கட்டிக்கொண்டேன்...
*****


பகுதி. 02
'காஃபி ஆறிவிடப்போகிறது..’
‘இல்லை.. இனிமேல் தான் சூடு அதிகமாகப்போகிறது...’
‘வா.. உன் அறையை காட்டுகிறேன்..’
நழுவினாள்..
கை கோர்த்துக்கொண்டாள்..
அழைத்துச்சென்றாள்...

அறைக்கதவை திறந்தாள்...
‘உனக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்..’
‘ஹ்ம்ம்..’

கட்டில்.. பெரிய கட்டில்... இரண்டு தலையணை... ஒரு பெரிய டி.வி...
‘இந்த அறை யாரோடது...?’
‘உன்னோடது..’
‘அதுவல்ல... இதற்கு முன் யார் பயன்படுத்தியது?’
‘யாருமில்லை..’
‘டி.வி, கண்ணாடி என்னன்னமோ இருக்கிறதே...??’
‘உனக்காக வாங்கியது...’
‘ஏன் அப்படி?, நான் நான்கு நாள் விருந்தாளி.. ‘
‘அந்த நான்கு நாளும் காட் கிஃப்ட் எனக்கு’

நிறைய புத்தகங்கள்.. எல்லாமே ஆங்கில புத்தகங்கள்... நாவல்கள் போலும்... குண்டு குண்டாக....
‘ நீ படிப்பதற்கா....?’
‘ஆமாம்... நான் படிப்பதென்றால் உனக்கான அறையில் வைத்துதான் படிப்பேன்...’
‘எத்தனை நாளாக..?’
‘நீ விளையாட்டாக, ’ஒரு நாள் வீட்டு வாசலில் வந்து நிற்பேன் பார்..’என தொலைபேசியில் சொன்னதிலிருந்து....
‘ஆறு மாசம் முன்பிருந்தா?’
‘ஆமாம்..’
’லவ்லி...’
’அப்பா வருகிறார்..’
‘எப்படி கண்டுகொண்டாய்?’
‘வா சொல்கிறேன்..’

கையை பிடித்து அழைத்துச்சென்றாள்..
படிக்கட்டுகளில் இறங்கினோம்..

‘இங்கேயே இரு.. வந்துவிடுகிறேன்...’

ஒரு குடையை எடுத்துக்கொண்டாள்.. விரித்துக்கொண்டாள்... வாசல் வழியாக வெளியேறினாள்...

கேட் அருகே சென்று கதவை திறந்தாள்.... வெள்ளை நிற கார் ஒன்று உள் நுளைந்தது...
‘ஜட்ஜ் என்றாலே வெள்ளை கார் தான் போலும்..’ மனதுக்குள் எண்னிக்கொண்டேன்...

கேட்டை தாளிட்டு விட்டு, பூட்டு போட்டு சாவியுடன் திரும்பினாள்..

ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்திருந்தேன்... காரில் இருந்து இறங்கிய அங்கிள் ஒரு துளிகூட நனைந்திருக்கவில்லை....
எப்போதுமே ஏழைகளுக்காகதான் மழை....
இவர்களுக்கு இல்லை..
எழுந்துகொண்டேன்..

’வாங்க தம்பி... சாரி.. வெளியில் கொஞ்சம் அவசர வேலை நிமிர்த்தமாக சென்றிருந்தேன்..’
‘பரவாயில்ல அங்கிள்...’
‘சாப்பிடுவதற்கு என் பொண்ணு எதாவது கொடுத்தாளா?’
‘இதோ... இனிமேல் தான் சாப்பிடனும்.. உங்களுக்காக வெயிட்டிங்...’
‘அப்படியா.. இதோ.. ஐந்தே நிமிடத்தில் ஃப்ரஷ் ஆகி வருகிறேன்..
உள்சென்றுவிட்டார்..

அருகில் வந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள்..
‘உன்னை எல்லோருக்கும் பிடிக்கும்டா...’
விடுவித்துக்கொண்டு சமயல் அறைக்குள் சென்று உணவுகளை மேஜைக்கு இடம் மாற்றினாள்...

வந்தார், அமர்ந்தோம், மூவரும் சாப்பிட்டோம், வார்த்தைகள் மிககுறைந்த அளவே செலவாகின..
’நல்லா இருக்குதா தம்பி..?’
‘ஆமா அங்கிள்.. பிரமாதம்..’
‘என் வீட்டு வேலைக்காரி.. சமையலில் கெட்டி..’
பதில் சொல்லவில்லை..
சற்றைக்கெல்லாம், முடித்து..,
‘ரெஸ்ட் எடுத்துக்கோங்க தம்பி.. காலையில் பார்க்கலாம்..’
கைகழுவிவிட்டு ஒரு அறைக்குள் நுளைந்தார்..
‘இந்தாளு உன் அப்பன் தானே?’
சிரித்தாள்... அர்த்தம் புரிந்துவிட்டது அவளுக்கு..

எனக்கான அறைக்குள் தனியாக இருக்கிறேன்..
காதல் பொங்கி வழிவதென்றால் என்னவென்று அப்போது தெரிந்தது... மனது ஆனத்தக்கூத்தாடியது... ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தேன் மழை.. பேய் மழை.... இருள் சூழ்ந்து,பரவி, அடர்ந்து இருந்தது...
மழைபெய்யும் போது அதற்கு ஒரு ஒலி இருக்கும்..
அன்றுதான் அந்த ஒலியை காதுகொடுத்து கேட்கிறேன்...

செல்போன் சினுங்கியது...
எடுத்துப்பார்த்தேன்
‘குட் நைட் ஸ்வீஹார்ட், லவ் யூ’
பக்கத்து அறையில் இருந்து வந்திருந்தது...
****

பகுதி. 03


ன்னுடன் பேசவேண்டும் என பதிலனுப்பினேன்.. சிறிது நேரத்தில் கதவை தட்டினாள்..
‘உனக்கேதும் பிரச்சனை இல்லையே?’-
’இல்லை.. ஒன்றுமில்லை..’-என தலையசைத்தாள்.
‘வந்து உட்கார்..’
வந்து கட்டிலில் அமர்ந்துகொண்டாள்..
‘நான் வருவதாக அப்பாவிடம் சொன்னபோது, அப்பா என்ன சொன்னார்..?’
‘எத்தன நாள் தங்குவார்? என கேட்டார்..’
‘என்ன சொன்னாய்?’
‘தெரியல... மே பி ஒரு வாரம்.. என...’
‘பெரிய ஆச்சரியம்.. உன் அப்பா என்னிடம் நடந்துகொண்ட விதம்...’
‘அவர் அப்படித்தான்... என்னைப்பற்றி நன்கு தெரியும் அவருக்கு...’
‘ஹ்ம்ம்... சரி போய் தூங்கு...’
‘இல்ல.. எனக்கு தூக்கம் வரவில்லை...’
‘ஏன்...??’
‘உன்னுடன் இங்கேயே இருந்துவிடுகிறேன்..’
‘ஷட்... கோ ன் ஸ்லீப்...’
‘நீ தானே வரச்சொன்னாய்..’
‘நான் தானே போகச்சொல்கிறேன்..’
‘வெளியில் போகலாமா....?’
‘பைத்தியமா உனக்கு.. பதினோரு மணிக்கா?, அதுவும் வெளியில் பயங்கர மழை வேறு....’
‘நனைவோம்...’
‘ஃபீவர் வரும்..’
‘வரும்போது பாத்துக்கலாம்..’
‘அப்பா திட்டப்போறாரு..’
‘சான்ஸே இல்ல... அப்பா இப்போ ஆல்க்கஹால்ல இருப்பார்...’
‘என்னதான் பண்ணனும்?’

என் கையை பிடித்துக்கொண்டாள்...
வேகமாக அறையை விட்டு வெளியே அழைத்துவந்தாள்...
யாருமே இல்லை.. அங்கிள் அவரோட அறையில்..
‘இவ்ளோ பெரிய வீட்டில் என்னைக்காப்பாற்ற யாருமே இல்லையா..??’
‘புலம்பாமல் வா...’

முதல் மாடியில் இருந்து தரைக்கு இறங்கி... சமையல் அறைக்கு நுளைந்தாள்.. என் கையை விடுவதாக இல்லை..

‘இங்கே என்ன?’
‘வெளியேற வழி இருக்கிறது...’
‘கொலைகாரி..’

சமையல் அறையின் கதவை ஓசைப்படாமல் திறந்தாள்..
வெளியில் பேய் இருட்டு..

அவளுக்கு பழக்கப்பட்ட இடம்.. விறு விறுவென என்னையும் சேர்த்து இளுத்தாள்...

மழை குத்தியது.. மனச்சாட்சியுடன் சேர்த்து...

படிகளில் என்னை அழைத்துச்சென்றாள்..

இருட்டில் தட்டுத்தடுமாறி.. பல திருப்பங்கள் படிகளில்...

மூன்றாவது மாடி...
அதுதான் மொட்டைமாடி....
அங்கு வந்து சேர்ந்திருந்தபோது தொப்பக்கட்டியாக நனைந்திருந்தேன்..

அவள் குழந்தையாகிப்போனாள்...
கைகள் இரண்டையும் முடிந்தவரை நீட்டிக்கொண்டாள்... விரல்களை விரித்துக்கொண்டாள்... தலையை வானம் நோக்கி நிமிர்த்தி வாயை திறந்து காட்டினாள்....

சுற்றி சுழன்றாள்.. அவளுடன் சேர்ந்து நானும் நனைகிறேன்...

‘கமான் ஹனி...’ என் கையை பிடித்து இழுத்து ஆங்கில நடனமாக இசைந்தாள்....
பின்விளைவுகள் பற்றி அறிந்திருந்த குழந்தை... அப்பன்காரன் ஜட்ஜ்.. என் தலையை மட்டும்தான் என் அன்னை பார்சலில் காண நேரிடப்போகிறது...
’என்னை தூக்கிக்கொள்..’
இயல்பு நிலைக்கு தடுமாறி.. ‘என்ன?’ என்றேன்..

இரண்டு கைகளையும் என்னை நோக்கி நீட்டி என்னைப்பார்த்து மீண்டும்
‘என்னை தூக்கிக்கொள் ஹனி’

*****

பகுதி. 04



ன் இவ்வாறு நடந்து கொல்கிறாய்?’
‘உனக்கு பிடிக்கலயா?’
‘பயம்...’
‘பிடிக்கலயா சொல்லு?’
‘பிடித்திருக்கு ஆனாலும் பயம்.’
‘வீணானது உன் பயம்... என் அப்பா அதுவும் கேட்டுக்கொள்ள மாட்டார்...’
‘காதல் பற்றி அப்பாவிடம் சொன்னாயா..?’
‘ஆமா..’
‘..என்னது.. ஆமாவா...?’
‘ஏன் மிரளுகிறாய்.. அது நடந்து 3 மாதங்களாகின்றன...’
‘உ..உன்ன என்ன பண்ணுறது....???’
‘ஹக்...’
‘ஃபக்...’
‘ஹ்ம்ம்..’

இரவு ஒரு மணிக்குத்தான் இந்த மழை பாழாய்ப்போன மழை விட்டுத்தொலைத்தது..
****
‘ஹனி.... குட் மார்னிங்.. .... எழுந்திருடா.... தடியா..’
‘ஹ்ம்ம்...’
‘டைம் பத்து...’
‘ஹ்ம்ம்ம்..’
‘காபி வந்திருக்கு...’
கண்ணை திறந்து பார்த்தேன்... மங்கலாக இரண்டு உருவம்....
‘அது யாரு...’
‘மீனா.. சமையல் அம்மா..’

எழுந்துகொண்டேன்...
’அப்பாக்கு கொடுத்தாச்சா காபி?’
‘அப்பா வெளியில் சென்றாச்சு....’

காலையில் தான் கவனித்தேன் அவளின் அம்மாவின் புகைப்படம்.. ஹாலில்.. பெரிய ஃப்ரேமில்... சிரித்துக்கொண்டு...
வணங்கிக்கொண்டு அவளுடன் வெளியேறினேன்.

மலையாள சாலைகளில் நடந்துகொண்டிருந்தோம்...
ஜிலேபி வாசகங்கள் நிறைத போஸ்டர்கள்... கருப்பு கலரில் ஷேர் ஆட்டோ... ஆங்காங்கு சாயா.
எந்நேரமும் மழைபொழியலாம் மாதிரியான வானிலை.

‘இங்கு எப்பவுமே இப்படித்தான் இருக்குமா?’
‘எது?’
‘கிளைமேட்?’
‘கிட்டத்தட்ட... ‘
‘இங்கிருந்து மூனார் எவ்ளோ தூரம்?’
‘ஏன் போகணுமா?’
‘இல்ல.. கேரளாவில் எனக்கு தெரிந்த இடம் அது ஒன்றுதான்’

கொஞ்ச தூர நடையில் ஒரு சாலையை விட்டு இன்னொரு சாலைக்குள் நுளைந்தோம்..

ஆங்காங்கு மலைப்பாறைகள்... பாறைகளில் போஸ்டர்கள்...

’அது மம்முட்டி தானே?’

கழுவப்பட்ட மரங்கள்... நடமாட்டங்கள் குறைந்திருந்தது...

‘மேலே பார்..’
‘எங்கே?’
‘இந்தப்பக்கம் மேலே பார்...’
‘ஓய்ய்... என்னதிது... ? மலையில என்ன கட்டிடம்?’
‘ஸ்கூல்...’
‘ஸ்கூல் ஆ?’
‘ஆமா... நான் படிச்ச ஸ்கூல்... மலைக்கு அந்தப்பக்கம் வழி இருக்கு... நடந்து போவேன் ஸ்கூலுக்கு...’
‘ஆவ்ஸம்...’


நிறைய வாங்கி கொடுத்தாள்...
அவளும் வாங்கிக்கொண்டாள்...
மிக நெருக்கத்துடன் நடந்து வந்தாள்..
திக்.. திக்..

‘உனக்கு எத்தனை நாள் லீவு?’
‘நீ இங்கு இருக்கும் மட்டும்?’
‘நாளை மறுதினம் கிளம்பிவிடுவேன்..’
‘விடமாட்டேன்..’
‘போயே ஆகனும்...’
‘நானும் வந்துடுவேன்...’
‘பைத்தியம்..’
‘விட்டு இருக்கமுடியவில்லை.. சென்னைல எங்கள் நிறுவனத்திற்கு கிளை இருக்கிறது...’
‘வரவேண்டாம்..’
’ஏன்...??’
‘உன் அப்பா விடுவாரா?’
‘ஸீ.. என் அப்பா பற்றிய கேள்வி எல்லாம் கேட்காதே... எனக்கு அவரைப்பற்றி எல்லாம் அக்கறை கிடையாது.... நான் சம்பாதிக்கிறேன்.. மாதம் ரெண்டு லட்ச ரூபாய் போதாதா?’
‘என்ன தான் ப்ளான்..?’
‘உன்னை திருமணம் செய்துகொண்டு சென்னையில் செட்டில்..’
‘என்னைவிட உனக்கு ஒரு வயது அதிகம் தெரியுமா?’
‘அதனாலென்ன?’
‘எங்கள் வீட்டில்....’
‘சமாளிக்காதே... எனக்கு தெரியும்... உன்னை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று என் அப்பாவிடம் சொன்னால் சிம்பிளாக ஓகே என்று சொல்லுவார்’
‘என்னால் நம்ப முடியவில்லை..’
‘வா... இன்று கேட்டு விடலாம்...’
‘வே..ண்..டாம்...’
‘இதுவரை எங்கு இருக்கிறாய் என்று ஒரு போன் பண்ணினாரா பாத்தாயா? என்மேல் அவ்ளோ நம்பிக்கை... நான் எது பண்ணினாலும் சரியா இருக்கும்..’

மொபைல் வைப்ரேட் ஆனது...
பாக்கெட்டில் கைவிட்டு எடுத்தேன்...
‘மச்சி... என்னடா.. மேட்டர முடிச்சிட்டியா??’

பதில் டைப்பினேன்...
‘poda.. porampokku'
*****

பகுதி. 05


திய உணவு உனக்காக ஸ்பெஷலா பண்ணச்சொல்லியிருக்கிறேன்.. மீனா அம்மாவிடம்..’
‘ஹ்ம்ம்... போலாம்...’

எழுந்துகொண்டோம்..
‘என்னை எப்படி இவ்வளவு நம்புகிறாய்?’
நடப்பதை நிறுத்தி தலையை நிமிர்த்தி பார்த்தாள்...
‘புரியல.. என்ன கேட்ட?’
‘இல்ல... என்மேல் உனக்கு இவ்வளவு நம்பிக்கை எப்படி வந்தது..?’
‘என்ன கேள்வி இது??? காதல் அப்பிடின்னாலே நம்பிக்கைதானே?’
‘எனக்கு புரியல.....’
’நீ என்னை நம்புறாயா?’
‘ந..ம்புறேன்...’
‘ஹ்ம்ம் அதுபோல்தான்... நான் உன்னை முழுமையாக நம்புறேன்..’

பதட்டம் அதிகமானது....

‘ஏன் எதுவும் பேசாமல் வருகிறாய்?’
‘ஒண்ணுமில்ல..’
‘ஐ நோ...’
‘எ..என்ன... ???’
‘ஸீ... ஸ்வீ ட்ஹார்ட், வீணான கற்பனைகளையெல்லாம் வளர்த்துக்கொள்ளாதே... என்னுடைய அப்பா ரொம்ப விபரமானவர்.. அதுமட்டுமில்லாம நான் ஒரு மேஜர் பொண்ணு.... என்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்கிற உரிமை எனக்கு மட்டும்தான் உண்டு..’
‘உன்மேல் எனக்கு எத்தன பர்ஸண்ட் காதல் இருக்குன்னு நம்புற?’
‘.......25 %’

குப்பென்று எனக்கு வேர்த்துவிட்டது....
’...எ...என்ன..????’

பதில் சொல்லவில்லை..

எனக்கு உறைக்கிறது...
உண்மைதான்.. 25 % தான் காதல் எனக்கு அவள்மேல்...
ஒரு பணக்கார பெண்...
அழகான பெண்...
இல்லை... மிக அழகான பெண்...
ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 5 மொழிகள் பேசும் ஒரு பெண்...
மெடிஸின் தயாரிக்கும் ஒரு கம்பனியில் வேலை, சம்பளம் ரெண்டு லட்சத்திற்கும் மேல்...
அப்பன்காரன் ஜட்ஜ்...
வீட்டு வாசலில் ரெண்டு காவலாளி...
வீட்டுக்கு ஒரே பெண்...
ஸ்டேட் விட்டு ஸ்டேட் விட்டு பறக்கும் பெண்....
இதெற்கெல்லாம் மேல் ரொம்ப விபரமான, நல்ல பண்புள்ள பெண்...
இப்படி ஒரு பெண்ணுக்கு என்மேல் காதல் வருவதா??
என்னைப்பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாள்...
புரிந்து வைத்திருக்கிறாள்..
இந்த ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே வேலை நிமிர்த்தமாக சென்னை வந்திருந்தபோது சந்திப்பு...
தொலைபேசியில் காதல் அறிவிப்பு....
வெறும் தொலைபேசியில் பேசுவதை வைத்து ஒருவரை எடைபோடலாமா...

முறைப்படி அவள்மேல் எனக்கு காதல்தான் வந்திருக்கவேண்டும்...
அவளை எனக்கு பிடிக்கும்.. ரொம்ப பிடிக்கும்...
தோளில் சாய்வது எனக்கு தேவைப்படுகிறதுதான்...
அவள் அழகு என்னை என்னன்னமோ செய்கிறதுதான்...
பட் காதல்??
கல்யாணம்?

‘வீடு வந்தாச்சு!’
****
அற்புதமான மதிய உணவு... ஏகப்பட்ட வெரைட்டிஸ்....
‘அற்புதமான சமையல்மா உங்களது...’
மலையாளத்தில் மொழிபெயர்த்தாள்..
‘அப்போ... மீனா என்பது தமிழ் பெயர் கிடையாதா? நான் இவங்க தமிழ் அப்பிடின்னுதான் நெனச்சிக்கிட்டிருந்தேன்...’

*****
’Good Night Sweetheart' என டைப்பிக்கொண்டிக்கும்போது;
கதவை தட்டினாள்...
திறந்தேன்.
‘என்ன...??’
‘உன்னை பாக்கவேண்டும்போல் இருந்தது... வந்துவிட்டேன்..’
‘பார்த்தாகிவிட்டதா?’
‘இல்லை...’
சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள்...

‘உன் அறைக்கு சென்று தூங்கு.. ப்ளீஸ்.. காலையில் பேசிக்கலாம்...’
‘ஐ வான்ன ஹாவ் செக்ஸ் வித் யூ.........’
’.....வாட்ட்ட்ட்ட்???’
******

பகுதி. 06


திர்ச்சியில் இருந்து மீழவில்லை..
இவள் ஏன் இப்படி இருக்கிறாள்...
ஒரு பெண் போலவா நடந்துகொள்கிறாள்...
இப்படியா கேட்பது..
தன்னுடைய வீட்டில் இருக்கிறோமே... அப்பா அடுத்த அறையில் இருக்கிறாரே.. கொஞ்சமாச்சும் பயப்பிடுகிறாளா....?
ஒருவேளை ’பெண்கள் இப்படித்தான்’ என்று நான் தான் தப்பான கண்ணோட்டம் வச்சிருக்கிறேனோ....

அவள் கண்டிப்பா சரியானவளாகத்தான் இருப்பாள்....
நான் தான் பட்டிக்காட்டான் போல் நடந்துகொண்டேனோ...?
என்னுடைய தகுதிக்கும் அதிகமான ஒரு பெண்ணாய் இருக்கிறாள்...
காதலாம் என்மேல்...
சிரித்துக்கொள்கிறேன்..
அறைக்குள் வந்தவளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி அறையை சாத்திக்கொண்டு விட்டேன்....

அசிங்கப்படுத்திவிட்டேன் அவளை.....
காதல் குறைந்திருக்கும்...
காலையில் வந்து ’வெளியே போடா நாயே’ என கத்துவாள்...
போய்விடலாம்...
வெளியே தள்ளும்போது அவளுடைய கண்கள் கலங்கின....
காயப்படுத்திவிட்டேன்..
நான் எங்கே அவளை புரிந்துவைத்திருக்கிறேன்...?
அப்படியே தூங்கிவிட்டேன்....
****
3ம் நாள் காலை.
மொபைல் சத்தத்தில் எழுந்துகொண்ட்டேன்..
மொபைலில் பெயரை பார்த்ததும் நேற்று இரவு நடந்த சம்பவம் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட்டில் ரீ-வைன் ஆனது.
சரிதான்.. நேரில் சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டு மொபைலில் ‘வெளியே போ’ சொல்லப்போகிறாள் போல...

திரையை ஸ்வைப் பண்ணி காதில் வைத்துக்கொண்டேன்...
பேசினாள்...
‘ஹனி.. குட் மார்னிங்... எழுந்திருச்சாச்சா....
கதவை திற டார்லிங்....’
இரவு படார் என கதவை சாத்தி லாக் போட்டுக்கொண்டது ஞாபகம் வந்தது..
‘ஓ...ஷிட்... ஐயாம் சாரி...’
வேகமாக எழுந்து கதவை திறந்தேன்...

கையில் காஃபியுடன் ‘குட் மார்னிங் டார்லிங்’ என சிரித்தாள்...
தூக்கிவாரிப்போட்டது எனக்கு...
அவமானம்...
அவமானப்படுத்திவிட்டாள்...
உண்மையான அன்பு நிறைந்த புன்னகை அவள் முகத்தில்..
ச்சே.. நான் எவ்வளவு கேவலமானவன்..

உள்ளே வந்தாள்..
’குளிச்சு ரெடியாகு ஹனி.. நாங்க ஒரு இடத்துக்கு போகப்போறோம்....’

சரிதான்... இவளே ரெயிவே ஸ்டேஷனில் கொண்டுவந்து விடப்போகிறாள் போலும்...
‘..எ..ங்கே..’
‘சொல்கிறேன்...’

மீனா அம்மா வாசலில் நின்றுகொண்டு..
‘அம்மா..’ என குரல் கொடுத்தாள்..
’இல்ல பரவால்ல... நான் பாத்துக்கிறேன்.. நீங்க போங்க..’என இவள் திருப்பி அணுப்பினாள்..
டவலை எடுத்துக்கொண்டு குளியறைக்குள் நுளைந்தேன்...
‘ஹனி.. மேக் இட் ஃபாஸ்ட்...’
‘ஹ்ம்ம்..’


****
குளித்து முடித்துக்கொண்டு பாத்ரூம் கதவை திறந்தேன்.. கட்டிலில் இருந்து எழுந்து ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்துக்கொண்டாள்...
இறுக்க கட்டிப்பிடித்துக்கொண்டாள்..
பேச்சு மூச்சற்று நின்றிருந்தேன்...
என்னுடைய கையை எடுத்து தன்னை கட்டிக்கொண்டாள்....
‘ஐயாம் சாரி டார்லிங்.. நேற்று இரவு உன்னை ரொம்ப காயப்படுத்திவிட்டேன்’ என சொல்ல எத்தனிக்கும்போது
மேற்கண்ட வார்த்தைகளை அவளே சொன்னாள்.

*****
பகுதி. 07


றையில் இருந்து என்னை அழைத்து வந்தாள்..
‘நீ ரொம்ப அழகா இருக்கேடா..’
‘இத நம்பலாமா?’
‘ம்ம்.. ஷூயூர்..’
நான் தலையாட்டினேன்.

‘வீட்டை பாத்துக்கோங்கம்மா... அப்பா வந்தா நான் வெளியில் சென்றிருக்கிறதா சொல்லுங்க...’ (மலையாளத்தில்)
வேலைக்கார அம்மா தலையாட்டினாள்.
*****

இருபது நிமிடமாக பயணமாகிக்கொண்டிருக்கிறோம்...
‘உனக்கு கார் ட்ரைவ் பண்ணத்தெரியும் என்று இது நாள் வரையும் தெரியாது எனக்கு...’
‘நீ இதுவரை நாளும் கேட்டதில்லையே...?’
‘இன்று இரவு நான் சென்னைக்கு கிளம்புகிறேன்..’
‘ஒரு வாரத்திற்கு இன்னும் நாட்கள் பாக்கி இருக்கிறதே???’
‘ஒரு வாரமா?.. ஒரு வாரம் தங்குவதாக நான் எதுவும் சொல்லவில்லையே?’
‘வீண் பேச்சு.. போக விடமாட்டேன்.. வேறு எதாவது பேசு...’
’நீ என்மேல் வருத்தமாக இருக்கிறாயா?’
’ஆமாம்..’
எதிர்பார்த்ததுதான்...
முதலில் மறுத்து பின் உண்மைசொல்லும் பழக்கம் அவளில் இல்லை...

’நேற்று இரவு நடந்த சம்பவத்தினாலா?’
‘இல்லை...’
’அ..அப்போ.....?’
‘நீ என்னை புரிந்து வைத்திருக்கும் அளவை நினைத்து வருத்தம் கொள்கிறேன்..’
’எனக்கு தெரியும்.... ஏன் நான் இப்படி இருக்கிறேன் என்று தெரியவில்லை...’
‘ஹ்ம்ம்....’
‘உண்மையில்.. நீ என் தகுதிக்கும் மேல் இருக்கிறாய்...’
‘ஆனால் நான் அதை நினைத்து வருத்தப்படுகிறேன்..’
‘ஏன்.......???’
‘அதுதானே உனக்கும் எனக்குமான இடைவெளியை நிரப்புகிறது..’
’என்னில் காதல் வந்ததற்கான காரணம் எதாவது சொல்லேன்..?’
‘ நீ நல்லவன்... திறமையானவன்... உன்னில் எப்போதும் பாசம் எடுத்துக்கொள்ளலாம்... அன்பினால் நிறைந்தவன்... எல்லோரிடமும் நட்பானவன் நீ... ’

இடைவெளி விட்டு தொடர்ந்தாள்...
‘என்னில் காதல் வராதற்கான காரணம்..?’
’தெரியவில்லை... உனக்கு ஏற்றவன் நான் இல்லை என்பது என் கருத்து..’
‘அபத்தம்... உளறுகிறாய்... பைத்தியம் உனக்கு...’
‘கோவப்படாதே...’
காரை ஓரம் கட்டினாள்..
கண்கள் சிவக்க,
‘நான் தான் சொல்கிறேனே... நீ ஏன்ன் புரிந்துகொள்ள மறுக்கிறாய்... உன்னில் நான் பைத்தியமாக இருக்கிறேன்... நீ என்னைவிட திறமைசாலி.. உலக விஷயங்கள் எவ்வளவு தெரிந்துவைத்திருக்கிறாய்.. தினமும் உன்னில் இருந்து ஏதாவது ஒன்று கற்றுக்கொள்கிறேன் நான்... எல்லாத்திற்கும் மேல் நான் உன்னை காதலிக்கிறேண்டா... இப்பவே இப்படியே நான் சென்னை வந்துவிடமுடியும்... என்னால் உனக்கு மாதம் கை நிறைய சம்பளத்தில் வேலை வாங்கித்தரமுடியும்... நான் வீட்டில் இருந்துகொள்கிறேன்..... வேலைக்கு எல்லாம் போக மாட்டேன்... நீ சொல்லுகிறபடி நடந்துகொள்கிறேன்... ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ...’

பேசுவதை நிறுத்தி என் கண்களை தின்றுவிடும்படி பார்த்தாள்...
பலமாக மூச்சு வாங்கினாள்...
நான் அப்படியே தான் இருந்தேன்.. எதுவும் பேசவில்லை...
‘என்ன... பார்க்கிறாய்???’
கோபத்தின் உச்சத்தில் கேட்டாள்..
‘ஏதுமில்லை...’
‘யூ...யூ... ப்ளடி.. ஃபக்கின் ஸ்கவுண்ட்ரெல்.. டாம் டாஷ்... இடியட்... ஏண்டா இப்பிடி இருக்க.... ‘
உடைந்துகொண்டு அழுதாள்...
சத்தமாக அழுதாள்...
ஸ்ரேரிங்கில் கைகள் இரண்டையும் அடித்துக்கொண்டாள்...
’டாஷ்.. யூ ரியலி டாம் டாஷ்.. ... ஃபக்கின் ... டாம் பாஸ்டர்ட்ட்... மண்ணாங்கட்டி... *****...... ஏண்டா இப்பிடி இருக்க????..........’
சத்தமாக அழுதாள்... முகம் பயங்கரமாக சிவந்து விட்டது...
கைகள் இரண்டையும் ஸ்ரேரிங்கில் வைத்துக்கொண்டு தலையை தொங்கப்போட்டுக்கொண்டு அழுதாள்...
‘... ஓ... மா ஃபக்கின் ஷிட்...’ விக்கி விக்கி அழுதாள்..
அமைதியாக பக்கத்தில் அமர்ந்திருந்தேன்..
அழுவதை நிறுத்திவிட்டாள்..
தலையை தூக்கவில்லை..
அமைதியாக இருந்திருந்தேன்..
அமைதி...
கண்ணாடி வழியே வெளியில் பார்த்தேன்..
வாகனங்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும்..
இம்மியளவும் சத்தம் காரினுள் நுளையவில்லை..
காரின் எதிரே மரம்...
அந்த இடத்தை நிழல் பரப்பிக்கொண்டிருந்தது,....
மழை பெய்ய ஆயத்தமாக வானம்...
மரம் அசைந்துகொண்டிருந்தது...
கொஞ்சம் தொலைவில் ஒருவர் சாலையின் அருகே நின்று எதையோ விற்றுக்கொண்டிருக்கிறார்..
இன்னும் கொஞ்சதூரம் போனால் அவர் என்ன விற்றுக்கொண்டிருக்கிறார் என தெரிந்துவிடும்...
அவர் என்ன விற்றுக்கொண்டிருப்பார்..?
இளநியாக இருக்குமோ...??
கேரளாவில் எவன் இளநி குடிக்கப்போகிறான்??
வாட்டர் மெலான்...
மாம்பழம்..
கொய்யாப்பழமாக இருக்குமோ..
வாழைப்பழமாக இருக்கக்கூடும்...

சந்தேகம் வலுத்ததுக்கொண்டேயிருக்கும்போது,
மழை பெய்ய தொடங்கியது....
*****

இறுதி அத்தியாயம்.

து என்னவென்று அறியும் ஆர்வம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது...
சரி தெரிந்துகொண்டுவிடலாம் என்று மழையையும் பொருட்படுத்தாது காரை விட்டு இறங்கினேன்...

வானத்தை பொத்துக்கொண்டு மழை பெய்துகொண்டிருந்தது....

ரோட்டோரத்தில் விற்றுக்கொண்டிருந்தவர் அங்கிருக்கும் பொருட்களை மழையின் காரணமாக அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார்....

விரைவாக அவரருகில் சென்றேன்...
நான் வேகமாக வருவதை பார்த்த அவர்...
’என்ன சார் இளநி வேண்டுமா?’ என மலையாளத்தில் கேட்டார்...
என் வேகத்தை குறைத்துக்கொண்டேன்..
‘ஓ... இளநியா... வேண்டாம்....’
என நின்றுவிட்டேன்..
அந்த இளநி கடைக்காரர் இளநிகளை ஓரமாக இழுத்து ஒரு தார்ப்பாய் போட்டு மூடிகட்டிக்கொண்டிருந்தார்....

மழை பலமாக பெய்யத்தொடங்கியது...
வாகனங்கள் போக்குவரத்து குறைந்தது.. மக்கள் நடமாட்டமும் நின்றுவிட்டது....
முக்கியமான சாலையின் ஓரத்தில் மழையில் நனைகிறேன்...
இங்கு எனக்கு என்ன வேலை? அடுத்து என்ன செய்யவேண்டும்???
‘சாருக்கு தமிழ் நாடோ?’

திரும்பினேன்...
இளநிகடைக்காரர்.
‘ஆமா....’
‘எனக்கு தமிழ் நாடுதான் மாமியார் வீடு....
குற்றாலம் பக்கத்துல...’

அவரின் பேச்சுக்களில் கவனம் செல்லவில்லை... திரும்பி காரை பார்த்தேன்... சரியாக ஒரு நூறு மீட்டர் இடைவெளி...

மழையைக்கண்டால் துள்ளிக்குதிப்பாளே... ஏன் காரை விட்டு இறங்கவில்லை...??
மெல்ல நடந்து காரை நெருங்கி கதவருகே வந்து கண்ணாடியில் தட்டினேன்....
திறக்கவில்லை..
மீண்டும் தட்டினேன்..
அப்போதும் திறக்கவில்லை....
குனிந்து கண்ணாடிவழியாக உள்ளே பார்த்தேன்..

காரினுள் அவள் இல்லை...
எங்கே போய்விட்டாள்...

சுற்றும் முற்றும் பார்த்தேன்...

ஒருவர் கூட இல்லை...
அந்த இளநீர்கடை காரர் உட்பட...

கதவை திறந்தேன்... என்னுடைய தொலைபேசி டாஷ்போர்டில் கிடந்தது.. எடுத்து அவளுடைய நம்பருக்கு அழைத்தேன்..
காரினுள் சினுங்கியது...
‘ச்சே...’
காரின் சாவி காரிலேயே இருந்தது... அவளுடைய பை....
தொலைபேசி.... எல்லாமே....

நிச்சயம் அருகில்தான் இருப்பாள்..

மழையில் நனைவதற்காக வெளியில் வந்திருப்பாள்....

எல்லாவற்றையும் உள்ளே போட்டுவிட்டு... காரின் கதவை சாத்திவிட்டு வெளியில் நோட்டம் விட்டேன்....


மழை... பேய் மழை... இருழ் சூழ்ந்து வேற இருக்கிறது... மதிய வேளையா இது...
’ச்சே... எங்கே போய் தொலைந்தாள் இவள்..???’

காரின் பின்புறம் வந்தேன்...
எங்கேனும் மரங்கள், கடைகள், வீடுகள்.. ஏதேனும் தென்படுகிறதா??
இல்லை.....
அவள்...
அவளும் இல்லை...

கார் வந்த பாதையில் இருந்து கொஞ்சதூரம் நடந்து வந்தேன்...
‘ஹனி.....’ சத்தமாக அழைத்தேன்....
மழையில் அது எனக்கே கேட்கவில்லை...

நடந்து வந்துகொண்டேயிருந்தேன்...

கையில் காசு இல்லை.... காரில் சாவி இருக்கு.. கார் ஓட்ட தெரியாது.... அவளின் வீட்டிற்கு இந்த இடத்தில் இருந்து போகத்தெரியாது... நான் கொண்டுவந்த பை அவளின் வீட்டில் இருக்கிறது.. பர்ஸ் பையில் இருக்கிறது.... ஓ காட்.....

சென்னைக்கு செல்வதா? அவளின் வீட்டிற்கு செல்வதா.... ’ஹனி... வேர் ஆர் யூ...???’


நடந்துகொண்டேயிருந்தேன்...
‘செல்போனை கையில் கொண்டுசெல்வதற்கு என்னவாம்??? இடியட்...’

செல்போன்...
நின்றுவிட்டேன்...

அவளின் செல்போன்....

ஞானம் உதித்தது..
சட்டென்று காரை நோக்கி ஓடினேன்....

காரின் அருகே வந்து கதவை திறந்து அவளின் செல்போனை கையில் எடுத்தேன்....

3 மிஸ்டு கால்...

யார் என்று பார்ப்பதற்காக பட்டனை அழுத்... அதற்குள்
மொபைல் வைப்ரேட் ஆனது.....
புதிய நம்பரில் இருந்து அழைப்பு...

ஆன்ஸர் பட்டனை அழுத்திக்கொண்டு காதின் அருகே கொண்டு சென்றேன்..

’அழைப்பை எடுப்பதற்கா இவ்வளவு நேரம்? எங்கே அவன்?’
சரளமான ஆங்கிலத்தில் ஒரு ஆணின் குரல்....

‘ஹல்லோ..’ இது நான்..

தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது...

நிச்சயம் என்னுடைய குரலைக்கேட்டுத்தான் அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது...

இவள் தப்பான வழியில் செல்கிறாள்...

*
(முற்றும்)









டிஸ்கி.
இந்த கதை ஒரு உண்மைசம்பவத்தின் ஒரு பகுதி.
இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது...

அந்த பெண் எனக்கு ரொம்ப வேண்டியவள்..
அவள் என்னிடம் காதல் கொண்டது உண்மை..

இத்தனை நாட்களும் அவளின் அன்பை பாத்திருந்த நீங்கள், அவளின் மறுபக்கத்தை அறிய ஆசைப்படவேண்டாம்...
அவள் ஒரு காதல் தேவதையாகவே இருந்துவிட்டு போகட்டும்...
அன்று இரவே நான் சென்னைக்கு ரயிலில் பயணமானேன்...

இன்று..
அவளின் அப்பா தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாக தகவல்...
அவள் ஒரு முக்கியமான சிறையில் ஆயுள் தண்டனைக்கைதியாக இருக்கிறாள்.


அங்கு தங்கியிருந்தால், நானும் இன்று குற்றவாளியாக்கப்பட்டிருக்கக்கூட்டும்...

அண்ட்...
இந்த காதல் கதையில் அவள் ஒரு காதல் தேவதை..

எனக்கு அவள் மேல் காதல் வருவதற்கு வாய்ப்பே இல்லை...
இதற்கு முன் வந்ததும் இல்லை....

(இந்த சிறுகதைக்கு பேஸ்புக்கில் லைக்குகளையும், கமெண்ட்ஸ்களையும் அள்ளி வழங்கி, ஊக்குவித்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்... )